|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
.............................................................................................
tamilparks
@
gmail.com
.............................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
நில்; கவனி; யாரிந்த முத்துக் குமார்?
குருதி வெறி
கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!
இரத்தம் சுடும் உறவிருந்தும்
ஒதுங்கி நின்ற தமிழகத்தில் -
யுத்தம் புகும் உணர்வூட்டியவன்!
தொப்புள் கொடி உறவறுத்து
ஈழத் தமிழ் இனத்திற்காய் -
தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்!
யார் குற்றமும் பகிராமல்
என் போன்ற இளைஞன் குற்றமென
நெற்றி பொட்டில் நெருப்பெய்தி அறிவித்தவன்!
தமிழர்கள் எங்கோ கொன்று குவிக்கப் படுவதை;
செய்தித் தாள், வார இதழ், வானொலி, தொலைகாட்சி,
இணையமெல்லாம் தலைப்பு செய்தியாகி
சூடு சொரணையோடு
எல்லோரையும் - திரும்பிப் பார்க்க வைத்தவன்!
குடும்பத்தின் பெயர்
தேசத்தின் விலாசம்
என் மக்களின் எல்லை -
ஈழம் வரையென எரிந்து கருகி கர்ஜித்தவன்!
தன் உயிர் சுட்ட
நெருப்பின் அனலில் அவன் முகம் பொசுக்கி
நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
படம் வரைந்துக் கொள்ள - உயிர் மை கொடுத்தவன்!
ஏது செய்தும்; என்ன செய்வோம்
ஈழம் விட்டெங்கோ சென்று -
இனி அவன் நினைவு நாளில்
மறவாமலொரு மாலை போட்டு - நினைவு கொள்வோம்!
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|