|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
என் மனவானில்:
அடியே காதலியே
அன்பான தேவதையே
பறிமாறிக்கொண்ட பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய வார்த்தைகளின் கோர்வைகள்
நொடிக்கொருமுறை நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும் நிறம்பி வழிகிறாய்
விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்
உயிரின் வேர்களை உலுக்கி
அதிலுதிர்ந்த உணர்வுகளை
உதிராமல் கோர்த்தாய்
கோர்த்த நினைவுகளை பொக்கிஷமாக்கி
அதை தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்
மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்
எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை கேட்கிறாய்
முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை மீண்டும்
மனத்திற்குள் பூட்டுகிறேன்.
அடிபோடி காதலியே
என்றுமே நீ என் தேவதையே!
நன்றி
மலிக்கா
|
மலிக்கா
அவர்களின் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|