|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
நானே!!!
காதலித்து
கண்மயங்கி
கொஞ்சிக்குலாவி
பிஞ்சு நெஞ்சில் சுமந்து
இன்பதுன்பங்களில் பிறந்து இறந்து
பெற்றெடுப்பதால்
நானும் தாயே!
உதிரத்தில் உருண்டு
உதரத்தில் உதைக்கும்
பிள்ளைபோல் என்கவிதை.
என்னுயிரில் உயிர்த்து
நெஞ்சிலல்லவோ உதைக்கிறது
என்கவிக்கிள்ளை.
பெற்றெடுக்கும் பேறு பெற்றதால்
நானும் தாயானவன்.
எண்ணம் உயிர்பதோ
தந்தையின் தலையில்.
கருவிதை விழுவதோ!
தாயின் மடியில்.
கருவின் தொடக்கமே தந்தைதானே
நான் தந்தையுமானவன்
என்கவிக்குழந்தைக்கு
நான் தந்தையுமானவன்.
என்னிலே எனைக்கண்டு
என்னுடன் நான்புனர்ந்து
மண்புழுவாவேன் நானே.
மண்புழுபோல் வேதனையில்
இம்மண்ணுலகில் உருந்து பிரண்டு
கவிக்குஞ்சுகளைப் பெற்றெடுப்பதால்
நான் தாயுமானவன்!
மூலம் என்பதால் தந்தையுமானவன்.!
சாக்கடை சகதியில் தேடி
ஆற்றிலே கழுவி
காற்றிலே கரைந்து
நரகத்தில் நங்கூரம் நட்டு
சொர்க்கத்தில் சுகம் கொணர்ந்து
பூமியைப் பூக்கவைக்கும்
போரளியும் நானே
பிரமாவும் நானே.
குருசேத்தில் உறைந்த குருதிகள் எல்லாம்
என்பேனையூடு வழிவதனாலும்
வன்னியில் விழுந்த மக்கள் எல்லாம்
பேனாமுனையில் எழுவதனாலும்
உதிரத்திலும் என்குழந்தை
உயிர்த்து எழுவதனாலும்;
நான் என்றும் சாகவரம்கொண்ட
பிறப்பே இறப்பேயில்லப் பிரமாவே
கவிதைகளை பெறுவதனால் தாயானவன்
காலத்தின் கருத்தரிப்பால் தந்தையானவன்.
படைப்பதில் சமனானவன்
பிரமாவுக்கு நிகரானவன்.
நன்றி
நோர்வே நக்கீரா |
நோர்வே நக்கீரா
அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|