படபிடிப்பில்
நானிருந்தால்,
நாள் ஓடுவது தெரியாது,
நேரம் நகருவது புரியாது,
உணவுக்கு நேரம் இல்லை,
உறவுகளோடு பேச வாய்ப்பு இல்லை,
உழைப்பு மட்டும்தான் கூட வரும்,
ஒவ்வொரு படமும் எனக்கு தலை பிரசவச
வேதனைதான்,
வெற்றி அடையும் வரை,
பங்காளிகளுக்கு பதில் சொல்லணும்,
பணம் போட்ட முதலாளிக்கு பதில் சொல்லணும்,
பத்திரிகைக்கு பதில் சொல்லணும்,
பக்கத்துக்கு வீட்டுக்காரன் முகம் முழிக்கணும்,
படம் தோற்றுபோனா,
சிலமணி நேரந்தான் ரசிகனான, நீ சிரிக்க,
பல மணி நேரம் உறங்காமல் நான் இருந்தேன்,
உனக்காக வரைந்த என் படம், என்னும் ஓவியத்துல,
அதன் வண்ணங்களாக என் வியர்வையத்தான் வரஞ்சு
வச்சேன்,
இதில் ஒரு துளி வியர்வை கூட ,அதிக உப்பிலாம
இருந்தாலும்,
குற்றங்குறை சொல்லிடுவ,
உப்பில்லாத பண்டமின்னு
வீடு வாசல் அடகு வச்சேன்,
பொண்டாட்டி தங்க தாலியையும் அடகு வச்சேன்,
ஆறரை கோடி கடவுளான உன் பொழுதை போக்குவதற்கு,
குறுக்கு தரிசனமா, சிலபேரு திருட்டு தனமா
வீ சி டி எடுப்பான்,
அந்த களையை நான் பிடுங்க, எந்த சாமிக்கிட்ட நான்
போவேன்,
போட்டி பொறாமை அதிகம் உண்டு,
குழி பறிக்கும் கூட்டம் உண்டு,
இத்தனையும் சமாளிச்சு, நான் ஜெயிச்சு நின்னாலும்,
சுதந்திர காற்று சுவாசிக்க, என்னால்தான் முடியல,
என்னை சுற்றி ஆயிரம் கண்கள்,
என்னையே சுற்றி வட்டமிட்டு பார்க்க,
கஷ்டப்பட்டு நான் உழைசாலும்,
இஷ்டப்படி வாழ ,என்னால்தான் முடியல,
திறமை இல்லாதவன் மேல வரலாம்,
உலகத்தில எல்லா வேலைக்கு
சிபாரிசு உண்டு,
ஆனா,
சிபாரிசு இருந்தாலும் திறமை வேணும்,
எங்க தொழில், மட்டும்தான்,
நன்றி
ஆ.முத்துவேல்
..................................................................................................................