|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
இல்லை
மாயை மேகம்
மூடிக்கிடக்க
இருளை விரட்டப் பரிதியில்லை
அலாரம் நெஞ்சிலடித்துப் பூபாளம் பாடிட
காலையை எழுப்பிவிடக் சேவலில்லை
கோப்பி போட மனைவியில்லை
கோப்பி மெசினுடன் சண்டையும் இல்லை
சீனி குறையக் கூட என்ற சிணுங்கலில்லை
மனைவியல்லையாதலால் பிள்ளையில்லை
பிள்ளைகளின் தொல்லையில்லை
மூத்தோர் மனைகளிருப்பதனால் பிள்ளைகள் தேவையில்ல
பெண் பொம்மைகள் சொன்னபடி செய்வதால்
கட்டிலைப் பங்குபோடப் பெண்ணில்லை, பெண்மையில்லை
பெண்ணின்றிப் போனதாலே சண்டையில்லை
சண்டையில்லாக் காரணத்தால் சரசமில்லை
இன்ரநெட்டில் உணவு வருவதால் சமையலில்லை
சமையலறையில்லை
சமையலலை இல்லாததால் செலவில்லை.
உணவு மணமில்லை.
இன்ரநெட்டில் சட் இருக்க பேசத்தேவையில்லை.
பேசுவதால் வருகிற பிரச்சனை ஏதுமில்லை
பேசுவதற்கும் வீட்டில் மனிதரில்லை
மனிதலில்லாததால் மனத்தில் வேதனையில்லை
தொலைக்காட்சி, தொலைபேசி என்று
வாழ்வு தொலைந்து கிடப்பதனால்
தேவைக்கு மனிதனைச் சுற்றி மனிதர் தேவையில்ல
இல்லை இல்லை இல்லை....!
மனிதனைச் சுற்றி மனிதரில்லை
மனிதனே இல்லா உலகில்
மனிதத்தை எங்கு தேடுவது
நன்றி
நோர்வே நக்கீரா |
நோர்வே நக்கீரா
அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|