|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
நாட்டு நடப்பு
உலகமயம் என்ற
பெயரில்
உள்ளுர் தொழிற்சாலைகளுக்கு போட்டனர் ப+ட்டு
தாராளமயம் என்ற பெயரில்
சாமானியர்களின் வாழ்க்கைக்கு வைத்தனர் வேட்டு
புதிய பொருளாதாரம் என்ற பெயரில்
புதிய சிக்கல்களை உருவாக்கி விட்டனர்
விவசாய நாடு என்று சொல்லிக் கொண்டு
விவசாயிகளின் தற்கொலைக்கு வழிவகுத்தனர்
விளை நிலங்களை எல்லாம் கோடிகளைப் பெற்று
வந்தாருக்கு தாரை வார்த்து மகிழ்ந்தனர்
பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டு
பகல் கொள்ளையடிக்க வசதி செய்தனர்
நதிநீரை உறிஞ்சி எடுத்து விவசாயி வயிற்றிலடித்து
நமக்கு பாட்டிலில் தந்து பணம் குவித்தனர்
அநீதிகளைக் கண்டால் தட்டிக் கேட்க
ஆக்ரோசமாகப் பால் போல பொங்கிடு
சின்ன மீனைப் போட்டு சுறாமீனைப் பிடிக்கும்
வாக்களிக்க வழங்கும் இலஞ்சத்தை வாங்காதே
மணல் கொள்ளையடித்து மறுபடியும் ஒரு
சுனாமிக்கு வழிவகுக்கும் கொடுமையைத் தடுத்திடு
இயற்கையை மாசு படுத்தும் சிலரின்
இழி செயலை உடன் தடுத்து நிறுத்திடு
நன்றி
இரா. இரவி, மதுரை |
இரா. இரவி, மதுரை அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|