|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
கவிஞன் கைப்பேனா
கவிஞன் கைப்பேனா
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட
ஈழத்தமிழருக்காய்
பலர்கையில் நானழுதேன்-என்
கண்ணீரின் கருத்துக்களை
காளையர் கணக்கெடுத்தனர்
மூத்தவரின் மூளையெடுத்து
அவர்களை மூலையிலிட்டு
போர் என்று புறப்பட்டனர்.
சிரித்தேன்
ஆனந்தக்கண்ணீரில்
சிரித்துச் சிரித்தே அழுதேன்
பலகாகிதத்தாள்கள்
உதிரம் சொட்டிச் சொட்டி நனைந்தன.
மீண்டும் அழுதேன்.
தூக்கிய துப்பாக்கிகளே
துர்ப்பாக்கியமாகி
தமிழர்களை நோக்கித் திரும்பியபோது.
நெற்றியில் பொட்டு வைத்து
கம்பங்களில் தூக்கிய பின்
என்னை எடுத்து அழடா என்றார்கள்
துரோகிகள் என்று
விக்கி விக்கி அழுதேன்
என்வினையே என்னைச் சுட்டது.
இன்றும் அழுகிறேன்
பொட்டாகிய தமிழ் குடும்பங்கள்
கட்டவிழ்ந்து
கெட்டுக் குலைந்து
அகதிகளாய் அலைவதால்.
தமிழ்பாலகரை பிறமொழி தத்தெடுத்து
கத்துவதுபோல் என்காதில் கேட்பதால்.
தேசத்தின் தமிழ்மரங்கள் அடியறுந்து
அவனியெங்கும் அகதிகளாய்
விழுதுகளில் வாழத்துடிப்பதனால்
ஊரிலோ!
எலும்புக்குத் தோல் போர்த்து எம்மவர்...
இராணுவத்தின் பாலியல் பலாற்காரத்தில்
எம்பாவையர்கள்....
அங்கங்கள் அறுந்து சிதறும் அகோரங்கள்....
வளர்த்தவன் உதிரத்தையே சுருபார்க்கும்
புலி....பூனைகள்....
பிணக்குவியலைப் பேரம்பேசும்
புலத்து புண்ணியவான்கள்.....
குண்டோடே கூடிப்பிறக்கும் குமருகள்....
காடை இராணுவத்தின் பாலியல் பாலற்காரத்தின் பின்
டைனமைட்டு முளைத்து வெடிக்கும்
பெண்குறிகள்.....
இரத்த சகதியில் காலூன்றி எம்மினம்
ஐயகோ!!!
இனியென்னால் அழக்கூடவே இயலாது
தொண்டையின் மேல் தொணதொணக்கும்
விடுதலைத் துரோகிகளின் துப்பாக்கிகள்
என்னைப் பார்த்துச் சிரித்து விடும்.
நன்றி
நோர்வே நக்கீரா |
நோர்வே நக்கீரா
அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|