வெட்கம் என்ன என்னவளே ...
நீ
பதியம் போடப் பட்டாய்
தளிர் விடவல்லவா நேரம் எடுத்து கொண்டாய்
துளிர் விட்டதும்
மெல்ல சிரித்தாய்
வளர்ந்து விட்டாய் - உன்னில் புன் சிரிப்பு
பூத்தும் விட்டாய்
ஆனால் இன்று ஏன் வெட்கப் பட்டாயோ...
உன் பூ இதழ்கள் இழந்ததலோ...
உன்னில் மென்மை கண்டேன்
அழகும் கண்டேன் அன்பும் கண்டேன்
என்னவளே நீயல்லவோ பெண்மையின் பிறப்பிடமும் இருப்பிடமும்
வாழ்க உன் புகழ்
என் உயிர் ரோஜா பூவே...
கந்தவேல்
குமரன்
நாகர்கோவில்