|
|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
சங்கத் தமிழனைத்தும் தா! -
மரபுப் பா
கரையென்னும் மன்னவனைக் கட்டி அணைக்கத் திரையென்னும் கைநீட்டித் தீதில் –நுரையென்னும் முத்தம் இடுகின்ற மூவாக் கடலே!நல் முத்தம் பிறக்கும் முதலிடமே! –மொத்தஉடல் உப்பாய் விளங்கும் உவரியுனை நாடியவர்க்(கு) உப்பிடும் வள்ளலே! ஓங்குமழைக்(கு) –அப்பனே! நீரலையைப் பேரலையாய் நீட்டி நிலமழிக்கப் பாரினிலே வாய்த்த பகையரசே! –நேரெதிர்த்(து) அந்நாளில் எங்கள் அருங்குமரிக் கண்டத்தை எந்நாளும் தோன்றா இடரலை –தன்னால் அழித்துக் களிப்புற்(று) அருந்தமிழ் நூல்கள் செழித்த சுவடழித்துச் சென்ற(து) –எழிலாமோ? பண்ணுக் கினியமொழி பால்மழலைக் கேற்றமொழி எண்ண உவகைதரும் இன்பமொழி –மண்ணுலகில் முன்தோன்றி மூத்தமொழி முச்சங்கம் கண்டமொழி தன்னேரில் லாத தமிழ்மொழியாம் –நன்மொழியின் எண்ணிறந்த ஏடழித்(து) ஏதும் அறியாத பெண்ணெனவே வீற்றிருத்தல் பேறாமோ? –கண்ணினிய எங்கள் தமிழழித்த இன்கடலே! நீயழித்த சங்கத் தமிழனைத்தும் தா!
நன்றி
அகரம் அமுதா |
அகரம் அமுதா
அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|