அன்று தியாகிகள்,
இன்று யோகிகள்
பாலியல் வழக்கில் ...
அன்று தேச தலைவர்கள்,
இன்று அரசியல் தலைவர்கள்,
ஊழலில்....
அன்று தேச சுதந்திரத்திற்காக,
இன்று சுய விளம்பரத்திற்காக,
அரசியல் தலைவர்கள்...
அன்று நீதி தவறிய மன்னர்கள்,
இன்று நிதி மோசடி கள்ளர்கள்...
அன்று தேசபிதா
இன்று தாதா .. ....
அன்று கப்பல் ஒட்டிய தமிழன்,
இன்று மப்பில் வாகனம் ஒட்டிய தமிழன்..
அன்று செய்த தவறுக்கு,
இன்று தவறு செய்வதற்கு.