|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
அவள்!
அவள்
எப்போதும் காலையில்!
அங்கு நிற்பாள்!
சில சமயம் தனியாக
பல சமயம்
கந்தல் உடையில்.. அவளது
அழுக்கான குழந்தையுடன்....
காய்ந்த ரொட்டியினை...
சமத்தாய் சாப்பிடும் அக்- குழந்தையில்
ஏனோ ...எனக்கு
இட்லி சாப்பிட
வீட்டை களோபரமாக்கும்
என் மகள் வந்து போகிறாள்...!
அவளது தினசரி வேண்டுதல்.....
சாமி எங்-குழந்தைக்கு பசிக்குதுங்க!
துன்ன ஏதாவது....
இப்படி நீளும்...சிலமணி நேரம் நீண்டுகொண்டே
போகும்!
சாலையின் மறுமுனையில்...
நான்கு துணியில் அவள் வீடு!
மாலையில்
சாலையின் அசுர வேகத்தின் மத்தியில்....
அவள் தன் குழந்தையின் எண்ணெய் அறியா...
தலையினை சீவி கொண்டிருப்பாள்....
அன்று காலையில்....!!!!
சாமியோவ்.....எம்புள்ளய காப்பாத்துங்க!
அலறினாள் .....
அபயகுரல் கேட்டு அசுர சாலை தம்பித்தது.....
லாரி மோதி குழந்தை சாவு...
தலைப்பு செய்தியினை கேட்டுவிட்டு...
வழக்கம் போல அந்த அசுர சாலை வேகமெடுத்தது.....!
இப்போதெல்லாம்...
அவளை தனியாக பார்க்கிறேன்....
யாரிடமும் அவள்- யாசிப்பதில்லை....
தனியாய் அவள்.....
நன்றி
விஜய ராணி
|
விஜய ராணி
அவர்களின் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|