தமிழ் தோட்டம் வாழ்க!
தோட்டம்!
கற்பனை விரியல்!
ஓட்டமின்றி, விரல் நுனித்
தட்டலில், வழிகாட்டலில் விரிந்தது,
நோட்டம் துள்ளும் மனதாய்.
கொட்டிய செந்தமிழ்ச் சுவையால்
நட்டமென்பது யாருக்குமில்லை!
கொட்டமடிக்கும்கவிமலர்த்
தோட்டம் காணுமென் மனது.
தோட்டத்தில் காலாற நடந்து
வட்டமிடுதல் தமிழ் பயிற்சி.
எட்டும் இலக்கணச் சூழல்
தொட்டணைத்து வருடும் மனதை.
அந்தமில்லாத் தமிழ் அழகாய்
சிந்தி விளையாடும் தோட்டம்.
சங்கத் தமிழ் நதிகளின்
சங்கமம் தமிழ் தோட்டம்.
பட்டுத் தமிழோடு நாளும்
ஒட்டியுறவாடிச் சிறகடித்து
எட்டுத்திசையும் பறந்து சிகரம்
தொட்டுவிடலாம் திறனிருந்தால்.
கடமை தமிழை ஊன்றுதல்!
காலச் சுவடுகளில் கருத்தாய்க்
கால்பதித்துச் சாகசம் புரிந்து
காரிய சித்தி பெறலாம்.
கணனி வெளிச் சோலையின்
மின் தமிழ் தோட்டம்
அரணிக்கட்டும!; பாலமிடட்டும்!
பூரணித்துப் பொலிந்து உயரட்டும்!
தமிழ் சிறகு விரித்துப் பலர்
தரணியில் புகழ் பெறட்டும்!
தகுந்த தளமாய் தங்கிடட்டும்
தமிழ் தோட்டம் வாழ்க!
நன்றி
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க். |