|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
டாஸ்மார்க் ஹைக்கூ
அரசாங்கம்
நடத்தும்
அவமானச்சின்னம்
டாஸ்மார்க்
பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
டாஸ்மார்க்
காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
குடிமகன்களுக்கு பிடித்த இடம்
டாஸ்மார்க்
குடிமகன்களிடமிருந்து கரந்து
அரசாங்கத்திற்கு வழங்கும்
கற்பக காமதேனு டாஸ்மார்க்
வருமானம் பெருகப் பெருக
அவமானம் பெருகுகின்றது
டாஸ்மார்க்
பாஸ் மார்க் வாங்கியும்
க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மார்க்
ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
நிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மார்க்போதை சுகத்தில்
குடிமகன்
சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
டாஸ்மார்க்
விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
டாஸ்மார்க்
வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
டாஸ்மார்க்
இலவசமாய் நண்பன் தருவதாக
இளித்துக் கொண்டு போகுமிடம்
டாஸ்மார்க்
இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
டாஸ்மார்க்
நன்றி
இரா. இரவி, மதுரை |
இரா. இரவி, மதுரை அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|