|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
பட்டணம்
வானம் மாடிகள்
மேல்
விழுந்து கிடக்கிறது
தேவர்கள் எங்கே தொலைந்தார்களோ?
கட்டிடக்காட்டை
பட்டணம் என்று
சுட்டிக்காட்டுகிறது
தெருப்பலகை.
சனநெரிசல்களால்
மனிதரிடம் மனநெரிசல்கள்
குதத்தால் சுவாசிக்கும்
வாகனங்களால்
சுவாசத்தையே மறந்த
மனிதர்கள்.
புகையடித்து
பழுக்கவைக்கப்படுகிறது
நுரையீரல்.
வேலையும் வீடுமாய்
கட்டிலும் குசினியுமாய்
பெண்கள் பெண்களின் மரதனோட்டங்கள்
பொருளாதாரப் போருக்குள்
பெண்கள் தாச்சி மறிக்கப்பட்டுகிறார்கள்
நேரமின்மை காரணமாக
கணவன் மனைவியிடையே
உத்தரவு கொடுக்கப்பட்டு விபச்சாரம்
அவசரமாய் அரங்கேறும்.
நடுவீட்டில் நட்டு நிற்கும் சவப்பெட்டி
சவங்களையே காட்டித் தொலைக்கிறது.
கொலையும் கொள்ளையுமாய்
இரத்தமும் சதையுமாய்
கொட்டிக்கொட்டித் கொல்கிறது.
நன்மைகளைத் தொலைக்கும்
தொல்லைக்காட்சியா
தொலைக்காட்சி?
இயந்திர உலகில்
எந்திர இதயம்
தாளம் தப்பி
காசு காசு என்றே படபடக்கிறது.
எல்லாமே தப்பத்தாளங்கள் தான்
வாகனங்களில் வந்து
இயந்திரத்தில் ஏறியே
நடைபழகுகிறான் மனிதன்
நிறை குறைய.
தலை நிறை எப்போ குறையும்?
தலைவலி எப்போ தொலையும்?
காசு காசு என்றலைந்து
கடன் கிடன் பட்டு
கடனுடன் சாகும்
நகரத்து வாழ்வு
இல்லை நரகத்து வாழ்வு
நன்றி
நோர்வே நக்கீரா |
நோர்வே நக்கீரா
அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|