வலி
அம்மாவை நேற்று
வீதியில் பார்த்தேன்...
கறுத்து சிறுத்து விட்டாள்
ஏன் இப்படி போனாள்
என்று கேட்க விருப்பம் எனக்கு.
ஏன் இப்படி போனாள்
என்று தெரியும் எனக்கு.
எனக்கு தெரியும் என்று
அம்மாவிற்கும் தெரியும்!
பிறகெதெற்கு தூசிப்புயல்?
ரேசன்கடை வரிசையில்,
கோயில் மடப்பள்ளியில்,
தெருவில்,
அம்மாவை இப்படி
காண்கையில் ஆடுதசை ஆடுகிறது...
பேசாமல்,
பெண் குழந்தையாய் பிறந்திருக்கலாம்
நானும்...
அவளின் சொல்லைவிட
அவரின் சொல்
கௌரவமாய் இருந்திருக்கும்
அம்மாவிற்கும்
எனக்கும்.
நன்றி
பா. ராஜாராம் |