Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 January 05, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 
இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

வெள்ளை வேட்டி - ஹைக்கூக்கள்

கரையும் காகமாக
கவிதைகள் கதறுகின்றன;
கடக்கும் காற்றாகவே
காதுகளில் ஓசையோடு நாம்!
----------------------------------------------------------------
எரிக்கும் கோப
கனல்களுக்கு
தெரிவதேயில்லை -
எதிராளியின் வலி!
----------------------------------------------------------------
துடிக்கும் மனிதனின்
கண்ணீரில் -
பிறக்கிறது விருதுக்கான
படைப்புகள்!
----------------------------------------------------------------
சுயம் வேறும்
நிஜம் வேறுமாகவே
பிறந்தும் இறந்தும் போகிறோம்
மனிதர்களன நாம்!
----------------------------------------------------------------
வெள்ளை வேட்டி
சட்டையில் -
கருப்பாகவே
நிறைய பேர்!
----------------------------------------------------------------
சுடுகாட்டின்
மீதிருக்கும் பயம்
வெட்டியான்களை
ஒன்றுமே செய்வதில்லை!
----------------------------------------------------------------
ஒரு கிண்ணம்
சாராயத்தில் மிதக்கியது
எத்தனையோ பேர்
தொலைத்த வாழ்க்கை!
----------------------------------------------------------------
உலகமிதோ
அலைபேசி தூரத்தில்
மனிதமெங்கோ
மனிதனை தொலைத்த இடத்தில்!
----------------------------------------------------------------
கல்லும் கல்லும்
உரசினால் -
நெருப்பு வருமென்றறிந்த மனிதனுக்கு
கத்தியும் கத்தியும்
உரசினால் மரணமென்பது
புரிந்தும் -
நீள்கிறது போர்!
----------------------------------------------------------------
வாழ்வின் பாதைகளில்
ஒற்றை தெருவே
மறப்பதில்லை -
நீ சென்று திரும்பிப் பார்த்த தெரு!!
----------------------------------------------------------------
உனக்கும் எனக்கும்
ஒரு பொருத்தமும்
இல்லை என்றாலும்
இருப்பதாகவே நம்புகிறது மனசு!
----------------------------------------------------------------
மனசு தோற்கும்
இடத்திலிருந்து
ஒரு வெற்றி கூட
புறப்பட்டதில்லை!
----------------------------------------------------------------
வழிக்க வழிக்க
முளைக்கிறது
தாடியும் சாதியும்!
----------------------------------------------------------------
நிறைய கட்டிடங்களில்
புதைந்திருக்கிறது
சில கொத்தனார்களின்
காதல் கதை!
----------------------------------------------------------------
மேய்ந்து கொண்டிருந்த
கோழியை துரத்திப் பிடித்து
கழுத்தை அறுத்து
தோலை உரித்து
கண்டம் துண்டமாக வெட்டி
வறுத்து தின்று விட்டு
ஏப்பம் விடுகையில்
கொலையற்று போகிறது
ஒரு உயிரின் இழப்பு!
----------------------------------------------------------------
சுற்றி சுற்றி
ஒரு கூடை பழம் விற்ற
கிழவியின் சிரிப்பை
திருடித் தான் கொள்கிறது
கால்வலி!
----------------------------------------------------------------
போ..போ..
நீ பார்க்கும்
ஓரக் கண் பார்வையால் தான்
என் பெயர் -
தெரு பொருக்கி
ஊதாரி' யானது!
----------------------------------------------------------------
ஒவ்வொரு -
வெண்சுருட்டிற்குள்ளும்
வெளியில் தெரியாமல் எரிகிறது
எங்கோ பீடி சுழற்றும்
ஒரு குழந்தை தொழிலாளியின்
எதிர்காலம்!!
----------------------------------------------------------------வெள்ளித் திரையில்
கதாநாயகன் கதாநாயகியின் ஆட்டம்
இரண்டு பக்கத்திலும்
சேலையின்றி ஆடும் தேவதைகள்;
வெற்று ரவிக்கையில் -
வீழ்கிறது தமிழச்சி மானம்!
----------------------------------------------------------------பிசாவும்
பர்கரும் தின்றதில்
செரிக்கவேயில்லை;
சிறுவயதில் தின்ற
நிலா சோறின் ஞாபகம்!
----------------------------------------------------------------
என் வீட்டு
மொட்டை மாடியில்
நிலா வருகிறது
நட்சத்திரம் வருகிறது'
நீ மட்டும் -
எதிர்வீட்டிலிருந்தும்
வரவில்லை!
----------------------------------------------------------------
நான்
ஒவ்வொரு பொருளையாக
அடுக்கி வைத்துக்
கொண்டே வருகிறேன்;

என் குழந்தை
ஒவ்வொன்றாக எடுத்து
கீழே வீசிக் கொண்டே
வருகிறது.

என் குழந்தையின் யதார்த்தம்
மீண்டும் அவைகளை நான்
எடுத்து அடுக்கி வைத்ததில்
களைந்து தான் போனது!!
----------------------------------------------------------------

நன்றி

வித்யாசாகர்

வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]