New World Jokes Quotes Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
April 22, 2009
உங்கள் பார்வை எண்
இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
நெற்றிக்கண் திறப்பினும்............!
வானத்துக் கடவுள்களின் மேல் வழக்குகள் பல தொடுத்திருக்கிறேன் பார்வைக் குறைபாடுள்ள பச்சிளம் குழந்தைகள் மனவளர்ச்சிக் குன்றிய மழலைச் செல்வங்கள் உடல் ஊனத்தோடு உழலும் பிள்ளைகள் ஆக்கும் கடவுளுக்கு அதிகப்படியான வேலைபளுவா? அதனால் இந்த கவனக் குறைவா?? உருவாக்கும் கடவுளின் மேல் வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்! தீவிரவாதி ஒருவன் தற்கொலை செய்துகொள்கிறான் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகச் செத்துமடிகிறார்கள் ஒன்றுக்கு நூறு என்ற விகிதாச்சாரத்தில் மறைந்திருந்து இயக்கும் மரண வியாபாரிகள் நலமாய் இருக்கிறார்கள் நல்லபடி வாழ்கிறார்கள் காக்கும் கடவுளுக்கு கணக்கில் தடுமாற்றமா? கணிப்பில் குளறுபடியா?? நலம் காக்கும் கடவுளின்மேல் வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்! தொடர்வண்டி விபத்துகள் தொடரும் சாலை ஆபத்துகள் இனப் படுகொலைகள் இயற்கைப் பேரழிவுகள் கொத்து கொத்தாக மொத்தமாய்ப் போய்ச்சேரும் எதிர்காலக் கனவிலிருக்கும் நாதியற்றக் குடிமக்கள் அழிக்கும் கடவுளுக்கு அப்படி என்ன அவசரம்? குறியீட்டு அளவின் நிறைவேற்றமா? (TARGET ACHIEVEMENT) குறுக்குவழியில் நடைபெறுகிறதா?? மொத்தமாய் அழிக்கும் கடவுளின் மேல் வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்! சாட்சிகளோடு காத்திருக்கிறேன்! சத்தியமாய் செயிக்கப் போகிறேன்!! நீங்களும் சாட்சியாய் வாருங்கள்! நிச்சயமாய் செயித்து விடுவோம்!! அன்புடன் துரை, தூத்துக்குடி
அன்புடன் துரை, தூத்துக்குடி
துரை, தூத்துக்குடி -ன் இதர படைப்புகள்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]