உன்னுலகம் . . .
நண்பா நீபெண்ணை நேசிப்பது நிஜம் என்றால்
அவளை உன் கண்ணை போல் நேசி
அவள் உன்னை நேசிப்பது உண்மை என்றால்
உன் இமையை போல ஓடி வருவாள்
அப்போது
விண்ணுலகம் மண்ணுலகம்
என்ன எவ்வுலகமும்
உன்னுலகம்
நான் உன் உயிர் . . .
கனவு கண்டேன்,
என் கண்ணே…
இது நடக்குமோ, இல்லையோ
ஆனால் உண்மை, இது நிச்சயம்
எவ்வளவோ கனவுகள்
எத்தனையோ இரவுகள்
தூக்கம் இல்லை, ஆனால்
துயரமும் இல்லை
எல்லாம் இழந்துவிடுவேனோ என என்னை அறியாது ஒரு பயம்
ஆனால் உண்மை,
நீ சொல்லும் ஒரு வார்த்தை தான்
என்னை ஏஙக விடாதே
ஒருமுறை பொய்யாவது சொல்லிவிடு
“நான் உன்னவள்” என்று
‘உன் உயிர்’ என்று – அந்த ஒரு வார்த்தையில்
எந்த கஷ்டத்தையும் தவிடு பொடியாக்குவேன்
ஏன் –
நான் உன் மேல் உயிராய் . . .
கந்தவேல்
குமரன்
நாகர்கோவில்
|