வாலிப வசந்தமாய்...
இயல்பாயொரு
இனிய
இதழ் விரிவு! – அது
இன்பம் தருமெனும்
இனிய எதிர்பார்ப்பு!
முல்லை, ரோஐh,
மல்லிகை இதழாகட்டும்.
மயக்கும் நறுமணமாய்
மாந்தரை மகிழ்வாட்டட்டும்!
வருவாயே! வருவாயே!
திருவோடு மகிழ்வையும்
பெருவாரியாய்க் கொண்டு
வருவாயே புத்தாண்டே!
துன்பம், வன்முறை
வலைகளை அறுத்தெறிந்து வாலிப வசந்தமாய்
வருவாய் புத்தாண்டே!
நன்றி
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க். |