அடுத்து, நாம் எழுதும் பாட்டு
வெண்தாழிசை
1. இது ஒரு மூன்றடிப்பாடல்.
முதல் இரண்டு அடிகளும் நான்குசீர்
அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.
2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று
வரவேண்டும்.
3. கடைசி சீர் ஓரசைச் சீராக நாள்,
மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள்
ஈரசைச் சீர்கள்.
(அசை பற்றிப் பயிலரங்கின்
2ஆம்
பகுதியிலும், அசைபிரித்தல் பற்றி
3ஆம்
பகுதியிலும் சீர் பற்றி
4ஆம்
பகுதியிலும், ஓரசைச்சீர் பற்றி
6ஆம்
பகுதியிலும் விளக்கியுள்ளதை மறுபடியும் ஒருமுறை படித்துக்
கொண்டால் எழுதல் எளிது)
எடுத்துக்காட்டுப் பாடல்:
கண்ட கண்ட உணவை உண்டால்
கொண்ட உடலில் நோய்கள் தாக்க
மண்டும் துன்பம் மிகும்.
-
புதுவைப்
பாவலர் அரங்க.நடராசன்.
இன்னொன்று :
தன்னின் நலமும் தானுறு குடும்ப
இன்னலந் தமையுமே எண்ணி இயங்குவார்
என்னினத் தலைவரா? ஏய்ப்பு!
அன்பார்ந்த தமிழ்நெஞ்சங்களே,
தயக்கமின்றி எழுதுங்கள் பிழை இருப்பின் திருத்திக் கொள்ளலாம். உங்கள்
எண்ணங்களைப் பாட்டாக்கி மகிழுங்கள்!
எழுதத் தொடங்குங்கள்!
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி