Home Wallpapers About Us Contact Us Contact Us

New World      Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்
நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

படைப்பாளர்கள்
உங்கள் கருத்து

தொடர்புக்கு

தெனாலிராமன் கதை
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 February 11, 2011

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

மரபுப் பா பயிலரங்கம்

கற்று தரும் ஆசிரியர்-  தமிழநம்பி

.........................................................................................................................................................................................

1. எழுத்து

2. அசை

3. அசை பிரித்தல்

4. அசை பிரித்தல் பயிற்சி

5. சீர்

6. மூவசைச் சீர்

6. (அ) ஓரசைச் சீர்

7.அடி

8. தொடை : மோனை – 1

9. மோனை 2

10. எதுகை 1

11. எதுகை – 2

12. இயைபு, முரண் தொடைகள்

13. வெண்செந்துறை

14. வெண்தாழிசை - 1

15. வெண்டாழிசை -2

16. வெண்தாழிசை 3

17. வெண்டாழிசை 4.

18. வெளிமண்டிலம் 1

19. தளை - 1

20. தளை - 2

21. தளை 3

22. தளை 4

வளரும்.......
 

நன்றி
தமிழநம்பி

தோட்டத்தில் பயிற்சி பெறும் நண்பர்களுக்கு நேரடியாக படல்களை எழுதுவதற்கான வசதி விரைவில் செய்துத்தரப்படும்

கீழ்க்காணும் வெண்டாழிசைப்பாடல்கள் எழுதியவர் யார் என்று பெயர் தெரியவில்லை:

வெண்டாழிசை  4.

தங்கத்தைப் புடம்போட தகதகக்கும் அதுபோல

பொங்கிவரும் துயரனைத்தும் புதிதாக்கும் புறந்தள்ளி

சிங்கமென வெளிவருவாய் சிரித்து.

 

மண்ணெல்லாம் நனைந்திடனும் வளம்பெற்றே வயலெல்லாம்

பொன்னாக விளைந்திடனும் புதுவாழ்வு மலர்ந்திடனும்

விண்பிளந்து வருமோநல் விருந்து.

 

கொட்டும்பார் மழையெங்கும் குளங்களெலாம் நிறைந்திடவே

பட்டமரம் துளிர்க்கும்பார் பசுமையெங்கும் தெரியும்பார்

கட்டமெலாம் தொலையும்பார் கரைந்து.

 

கட்டமுற்ற வேளாளன் கடன்வாங்கிக் கருத்துடனே

நட்டதெலாம் பயிராக நமக்கிங்கே உணவாக

விட்டொழியும் வறுமையதும் விரைந்து.

 

நன்கு அமைந்த பாடல்கள்!

 

வெளிமண்டிலம் 1

 

மந்தம் தனிமை வாட்டம் போக்கும் - புத்தகமே

எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே

அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே

சிந்தை தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!

 

- உமா.

 நல்லபாடல், பாராட்டு.

 

அவனடிமை ஐயா எழுதியவை:

வெளிமண்டிலப் பாக்கள்:

நான்முகன் நாரணன் நாடிடும் நாயக - நமச்சிவனே
நான்-நான் எனவுன் நாட்டியங் கண்டார் - நமச்சிவனே
நான்மறை ஓதிடும் நாவினில் நவில்பவன் - நமச்சிவனே
நானுனைத் தேடி நைந்தழி வேனோ - நமச்சிவனே

 

 

காலனைக் கொன்றிடும் காத்திடும் கார்த்திகை - தீபவொளி
மாலயன் மமதையை மாய்த்திடும் மலையிதன் - தீபவொளி
ஆலமாம் அகந்தை அறவோ டழித்திடுந் - தீபவொளி
கோலமோ கோவணன் குறுநகைக் கோவவன்  தீபவொளி

 

வெளிமண் டிலமே வெளிகொணர்ந்  திட்டாய்  - தமிழநம்பி
வளியுள் ளடக்கி வழிபார்த் திருந்தோம் - தமிழநம்பி
தெளிவோ டென்றும் தமிழ்மழை பொழிவாய் - தமிழநம்பி
நலியும் நெஞ்சம் நனைந்திடும் நிதமும் - தமிழநம்பி

நன்கு அமைந்த பாடல்கள். பாராட்டு.

 

வெளிமண்டிலம் 1

 

கண்ணில் தெரியும் கற்பனை இந்த - வலையுலகம்

எண்ணிலாச் செய்திகள் இறைந்து கிடக்கும் - வலையுலகம்

மண்ணிலே மாந்த முயற்சியின் விளைவே - வலையுலகம்

எண்ணம் பகிர எளிதாய் இனிய  வலையுலகம்!

 

- உமா.

அருமையான பாடல்.  

-- 
தமிழநம்பி
வெண்டாழிசை - 4

 
அவனடிமை ஐயா:

 
மூவடிப் பா :: காய் + காய் + காய் + காய்
 
சித்திகளின் சிறப்புகளை சிறுமதியர் அறியாரே
பத்தரிடம் பணம்பொருளைப் பறித்திடலாம் பலவிதத்தில்
இத்துறையில் இகழ்சேரப் புகழ்.
 
பொதுச்சொத்தில் விளையாடி பெரும்பணத்தைக் குவித்ததனால்
பொதுநலநாட் டரசுகளின்  பெருமதிப்பை இழந்தோமே
இதுபோலோர் இழிசெயலும்  இலை.

 
விஞ்ஞானம் விரிவடையும் விளைவுகளால் வினை;முடிவில்
இஞ்ஞாலம் இயலாது இறைவனையே இறைஞ்சுருக
அஞ்ஞானம் அகற்றிடுமவ் வருள்.

 
சித்திகளின் சிறப்புகளை சிறுமதியர் அறியாரே
பத்தரிடம் பணம்பொருளைப் பறித்திடலாம் பலவகையில்
இத்துறையில் இகழ்சேரப் புகழ்.

 
விற்பனையை விரைந்துயர்த்த விளம்பரத்தில் வனிதையரைத்
தெற்றெனவே தெருவோரம் திரையிடுவார் துகிலுரித்து
எற்றைக்கும் இழுக்கலவோ இவர்க்கு ! 
 
பாடல்கள் சரியாக உள்ளன. பாராட்டு.

 
 commonwealth countries என்பதைப் பொதுநல நாடுகள் என்று கூறலாம்.

 
உங்கள் பாடல்களை நேரடியாக நீங்களே எழுதும் வசதி  விரைவில் செய்து தருவதாகத் 
தமிழ்த்தோட்டப் பொறுப்பாளர் கூறியுள்ளார். அவ்வாறான நிலை ஏற்பட்டால் 
காலத்தாழ்த்தத்தைத் தவிர்க்கலாம்.

--
தமிழநம்பி

 

அவனடிமை எழுதிய பாடல் :

 எண்சீர் வெண்செந்துறை

பொருளிலா ஓசையை புகழ்பெறும் பாட்டென
பெரியமாற் றந்தரும் பொறியா சிரியராம்
அறிவிலா அகந்தையை அடக்கியுள் இரைச்சலை
அகற்றிடும் அமைதியேஅருட்குரு உருவமாம். 
 

அவனடிமை ஐயா எழுதியவை:

வெண்டாழிசை மூவடிப் பா
(
கருவிளம் + கருவிளம் + கருவிளம் + கருவிளம்)

1. 
மரிப்பதோ ஒருமுறை மனிதரே வரிப்பணம்
பறிகொடுத் திடுவதோ பலமுறை சிரித்திடத்
தெரிந்தவர் சிரித்திடு வீர்.

2.
கருவிளப் பதங்களில் கதறிட கருத்துடன்
கருவென முருகனைக் கருதிட கனவுடை
கருவுரு கலைத்திடு வான்.

பாடல்கள் சரியாக உள்ளன ஐயா.

.................................................................................................................................................                                                           
தமிழநம்பி
 

வெண்டாழிசை - 2. 

உன்றன் இல்லம் ஓங்க எண்ணி 

இன்றவ் வீழம் வீழச் செய்தாய்! 

நன்றோ கீழே!  நாணு! 

- குணமதி.

 

பாட்டு நன்றாக உள்ளது. பாராட்டு.

- தமிழநம்பி

---------------------------------------

காற்றும் நீரும் காணும் யாவும்

தோற்றம் நீயே போற்றி நின்றேன்

ஏற்றம் தாராய் என்று.

 

என்றும் நின்றாள் ஏத்து கின்றேன்

குன்றில் கோவில் கொண்டாய்க் கந்தா

மண்ணில் அன்பே மாற்று.

 

மாறும் நெஞ்சில் மையல் உன்மேல்

சேரும் மாறென் சிந்தை மாற்று

காரென்  றெம்மைக் காத்து. 


உமா.

 

மூன்று பாக்களும் நன்றாக அமைந்துள்ளன.

- தமிழநம்பி.

------------------------------------------

விண்ணோர் வாழ்வை வேண்டின் மண்ணில்

பொன்னை ஈதல்  போலே பின்னும்

கண்ணைத் தானம் செய்.

 

நல்லார் அல்லார் எல்லாம் சொல்லும்

சொல்லால் ஆகும் தீச்சொல் தீயாய்க்

கொல்லச் சேரும் தாழ்வு.

-- 
உமா.

 

பாடல்கள் சரியாக அமைந்துள்ளன, உமா.

- தமிழநம்பி.

------------------------------------

 

இன்னுமொரு மூவடி வெண்தாழிசைப் பா:


பணிநீ   பார்த்திட   சுடுமே   உன்மடிக்
கணினிக்   கிடமா   கம்பளி,   கிடக்கை
 ?
துணிமூ  டிடப்பொறி தீ  !

 

-          அவனடிமை.

 

ஐயா, பாடல் சரியாக உள்ளது.

பொருள் சரியாக விளங்கவில்லை.

விளக்கிச்சொல்லுங்கள்.

- தமிழநம்பி

 

-------------------------------------------

வணக்கம் ஐயா!

இதோ இரண்டாம் வகை (தேமாச் சீர் ) வெண்டாழிசையில் சில பாப்பூக்கள்:

ஓய்வு பெற்றோர் ஓயா தேதம்
சேய்கள் சார்ந்தே சிந்தித் தாலவ்
வோய்வும் எப்போ தோ ?

 

செம்மொ ழியால் செல்வம் சேர்த்து
சும்மா சுற்றும் சோம்பே றிகட்கே
கிம்மா நாடா, ஏன் ?

நித்தம்  சத்தம்  நில்லாப் பெட்டி
மொத்த  நாட்டை மூழ்கக் கட்டும்
இத்தொல் லைப்பெட்  டி.

நன்றி
அவனடிமை

---------------------------------------
 

அவனடிமை ஐயா,

வணக்கம்.

இரண்டாம் பாடல் நான்காம் சீர் ஓரசையில் உள்ளது. இறுதியில் கே சேர்த்துள்ளேன்.

 

மூன்று பாடல்களும் சரியாக அமைந்துள்ளன.

 - தமிழநம்பி

 

குதிரும்  குளுமை  குழைவாள் தலைவி
நிதமும்  நகைச்சுவை,  நேர்மை நிறைய
எதிரும்  புதிரும்  இல்லை !

மனோ

சரியாக வெண்தாழிசை எழுதியதற்குப் பாராட்டு. தொடர்ந்து எழுதுக.

--
தமிழநம்பி

வெண்தாழிசை
 
கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி
நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால்
நெஞ்சில் தைக்குமே முள்.
 
 
உமா.

சிறந்த பா. பாராட்டு உமாவுக்கு!

--
தமிழநம்பி

வெண்செந்துறை [ ஆறு சீர்கள்]

 

1. பட்டுச் சிறகை விரித்துப்

      பறக்கும் அழகைப் பாரு

  சிட்டைப் போலே நீயும்

      சிரித்து வாழப் பழகு!.

 

2. ஓடி யாட வேண்டும்

      உண்மை பேச வேண்டும்

   கூடி வாழ மற்றோர்

      குறைகள் மறக்க வேண்டும்!

 

3. தேடிப் பெற்ற பொருளை

         சேர்த்துக் குவித்தி டாமல்

   வாடும் ஏழை மக்கள்

        வறுமைப் போக்க ஈவாய்!

 

எண்சீர் வெண்செந்துறை

 

காசு பணத்தால் விளையும் நன்மை

     கையில் உள்ள வரைதான் உண்மை

நேசங் கொண்ட நல்லோர் நட்போ

     நிலைத்த யின்பம் நிச்சயந் தருமே!

 

எழுதியவர் : உமா

 

அருமையான அறுசீர் எண்சீர் வெண்செந்துறைகள் எழுதிய உமா அவர்களுக்குப் பாராட்டு.

தொடர்ந்து எழுதுக. மற்றவர்களும் எழுத ஊக்கம் தருக.

நன்றி.


--
தமிழநம்பி

 

வெண்செந்துறை
 
அன்புடை இல்லாள் அகத்திடை இருக்க
வண்டதைப் போலே வாழ்வதைத் தவிர்ப்பீர்.
 
ஒருமுறை தவறி ஒருபொய் சொல்ல
மறைக்கவோ ஆயிரம் மனமழிந் திடுமே!
 
அஞ்சுதல் பொய்ச்சொலல் அழுதுப் புலம்பல்
கெஞ்சுதல் யாவுமே கீழோர்ச் செயலாம்.
 
அன்புடன் உமா.
அருமையான மூன்று வெண்செந்துறைப் பாக்கள்
எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டும் வாழ்த்தும் கூறுகிறேன்.
தொடர்ந்து எழுதி மற்றவர்களுக்கு ஊக்கம்
அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்,
நன்றி.
--
தமிழநம்பி

 

வெண்செந்துறை  என்முயற்சி :
 
 
1. என்றும் நல்லவை எண்ணி நடந்தால்
      நன்றே நடக்கும் நாமும் உயர்வோம்!
 
 
2. இனத்திற் கிழைத்தாய் இரண்டகம் ஈழச்
    சினத்தின் ஆற்றல் செயலில் விளங்கும்!
 
தவறு இருந்தால் திருத்துங்கள்.
 
அன்புடன்,
 
குணமதி.
இரண்டு பாக்களும் அருமை!
 
பாராட்டுகள்.
 
தொடர்ந்து எழுதுங்கள்.  நண்பர்களையும் எழுதச் சொல்லுங்கள்.
 
நன்றி.
--
தமிழநம்பி

மரபுப் பா பயிலரங்கம் பற்றிய கருத்துக்கள்

மரபுப் பா பயிலரங்கத்தின் மகிமை !!!!

மரபுப் பா பயிலரங்கத்தில் இன்று முதல் நானும் தங்கள் 
வகுப்பில் சேர்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன். சில அடிப்படைப் பாடங்கள் எனக்கு மிகுந்த நன்மையளிக்கும். நன்றி. மிக்க மகிழ்ச்சி.

 
அன்புடன் உமா
நன்றி உமா.
உங்கள் வருகை தொடக்கத்தில் இருந்து பயில்வார்க்கு ஊக்கம் தரும்.
மற்றவர் துணிந்து எழுதத் தாண்டுதலாக இருக்கும்.
தொடர்ந்து வந்து உதவுக.
- த.ந.

 

 

 

பயிற்சி குறித்து எழும் ஐயங்களை கீழ் உள்ள மின் அஞ்சலுக்கு எழுதி அனுப்பி வையுங்கள்

 

 

tamilparks

@

gmail . com

New World           

 Collections 4 U Baby World
Computer Tips & Tricks  Mobile Park IT PARK
 Earn Money Online     Kanyakumari About India

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
இத்தளம் பற்றிய கருத்துக்களை பார்வையிட இங்கு சுட்டவும்

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்

  Online User

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]