நாம் அடுத்து எழுத இருக்கும் பாடல் வெண்தாழிசையில் இன்னொரு வகையாகும்.
பெயரைப் பற்றிக் கவலைப்பட வேண்டா!
இந்தப்பெயர் ஏன் இட்டனர் என்பது பற்றிப் பிறகு நாம் தெரிந்து கொள்ளலாம்.
சரி, இப்பாடலை எப்படி எழுத வேண்டும் என்று பார்ப்போம்.
1. இதுவும் மூன்றடிப் பாடலே.
2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.
3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.
4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
அவ்வளவே!
எடுத்துக்காட்டு :
நல்லார் போன்று நாட்டில் தோன்றி
தொல்லை எல்லாம் பின்னால் செய்யும்
புல்லர் இங்கே உண்டு.
இன்னொன்று :
அன்பு பண்போ டாழ்ந்த ஞானம்
நன்று மின்ன நாமும் வாழ
என்றும் நன்றே எண்ணு.
தயங்காமல் எழுதுங்கள். எழுத முயன்றால் எளிதில் வரும்.
பிழை நேரின் திருத்திக் கொள்ளலாம்.
எழுதத் தொடங்குக.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி