5. கலித்தளை
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை என்று பார்த்தோம். இதற்கு மாறாக, காய் முன் நிரை வருவது கலித்தளை ஆகும்.
பல்லுலகும் X பலவுயிரும்
பல்லுலகும் – கூவிளங்காய்; பல – நிரையசை
காய் முன் நிரை வந்ததால் கலித்தளை.
6. ஒன்றிய வஞ்சித்தளை
நின்ற சீர் மூவசைக் கனிச்சீராகவும் வரும் சீரின் முதலசை நிரையசையாகவும் இருப்பின் ஒன்றிய வஞ்சித்தளை ஆகும்.
தண்டாமரைத் X தனிமலர்மிசை
தண்டாமரைத் – தேமாங்கனி; தனி – நிரையசை
கனி முன் நிரை வந்ததால் ஒன்றிய வஞ்சித்தளை.
7. ஒன்றாத வஞ்சித்தளை
நின்ற சீர் மூவசைக் கனிச்சீராகவும் வரும் சீரின் முதலசை நேர் அசையாகவும் இருப்பின் ஒன்றாத வஞ்சித்தளை ஆகும்.
செந்தாமரை X நாண்மலர்மிசை
செந்தாமரை – தேமாங்கனி; நாண் – நேரசை
கனி முன் நேர் வந்ததால் ஒன்றாத வஞ்சித்தளை.
இனி, ஒரு குறளில் தளைகளைப் பார்ப்போம்:
அகர X முதல X எழுத்தெல்லா X மாதி X
பகவன் X முதற்றே X உலகு.
அகர X முதல
அகர – புளிமா; முதல என்பதில் முதல் அசை முத – நிரையசை.
எனவே, மாமுன் நிரை, இயற்சீர் வெண்டளை.
இவ்வாறே,
முதல X எழுத்தெல்லா
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.
எழுத்தெல்லா X மாதி
காய் முன் நேர், வெண்சீர் வெண்டளை.
மாதி X பகவன்
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.
பகவன் X முதற்றே
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.
முதற்றே X உலகு
மாமுன் நிரை(பு), இயற்சீர் வண்டளை. புரிகிறதா?
சரி, கீழ்க் காண்பவற்றிற்கு நீங்களே தளை கூறுங்கள்:
1. யாதும் ஊரே
2. வளிதிரிதரு திசையும்
3. கடுந்திண்டேர் களையினோ
4. வசையில்புகழ் பெற்றே
5. நெல்லும் உயிரன்றே
6. யாவரும் உரைப்பீர்
ஐயமிருப்பின் தயங்காது கேட்க!
விளக்கம் தரக் காத்திருக்கிறேன்.
----------------------------------------------------
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி