New World Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
June 04, 2010
உங்கள் பார்வை எண்
மரபுப் பா பயிலரங்கம்
கற்று தரும் ஆசிரியர்- தமிழநம்பி
.........................................................................................................................................................................................
12. இயைபு, முரண் தொடைகள்.
இயைபுத் தொடை : மோனை, எதுகை போல் இயைபு என்பதும் தொடைகளில் ஒன்றாகும். இது இசைப்பாடல்களில் மிகுதியாக வரும். அடியின் இறுதி ஒன்றி வருதல் இயைபு ஆகும். அடியின் கடைசி எழுத்து அல்லது கடைசிச் சொல் ஒன்றி வரும். எடுத்துக்காட்டு : அவரோ வாரார் கார்வந் தன்றே கொடிதரு முல்லையும் கடிதரும் பின்றே - இஃது எழுத்து இயைபு. இன்னகைத் துவர்வாய் கிளவியும் அணங்கே நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே - இது சொல் இயைபு. முரண் தொடை : அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுமாறு தொடுப்பது முரண் தொடையாகும். எதுத்துக்காட்டு : செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற்... இதில் சொல் முரண் ( செம்மை, கருமை) அமைந்துள்ளதைக் காண்க. தீமேய் திறல்வரை நுழைஇப் பரிமெலிந்து நீர்நசைப் பெறாஅ நெடுநல் யானை... இதில் பொருள் முரண் ( தீ, நீர்) அமைந்துள்ளது. இவற்றோடு, இன்னும் அளபெடைத் தொடையும் பிறவும் உள. அவற்றைப் பற்றிப் பிறகு அவ்வப்போது அறிந்து கொள்ளலாம். இனி, அடுத்த பகுதியில் ஒருவகைப் பாடல் எழுதப் போகிறோம். மிக மிக எளிமையாக இருக்கும்; அனைவரும் கலந்து கொண்டு எழுதலாம். tamilparks @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் வளரும்....... நன்றி தமிழநம்பி
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி தமிழநம்பி
பயிற்சி குறித்து எழும் ஐயங்களை கீழ் உள்ள மின் அஞ்சலுக்கு எழுதி அனுப்பி வையுங்கள்
New World
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]