பாட்டின் உறுப்புகளாக உள்ள எழுத்து, அசை, சீர், அடி, தொடைகளைப்
பற்றி அறிந்துகொண்டோம். இனிச் சிலவகைப் பாடல்களை இயற்றப்
பயில்வோம்.
நாம் முதலில்
எழுத இருக்கும் பாட்டு வெண்செந்துறை
ஆகும். இப் பாடல் எழுதல்
மிக எளிமையாகும்.
இலக்கணம் இவையே :
1.
ஓரடியில்
நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச் சீர்
வரலாம்.
2.
ஒவ்வொரு
சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும்.
3.
இரண்டு அடிகள் எழுத வேண்டும்;
இரண்டு அடிகளும் அளவு ஒத்து ( நான்கு அல்லது ஆறு
அல்லது எட்டுச்சீரில் அமைந்து) இருக்க வேண்டும்.
4.
இரண்டு
அடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5.
நாற்சீர்
அடியானால், 1, 3ஆம் சீரில் மோனையும்
ஆறு சீர் அடியானால், 1, 4ஆம் சீரில்
மோனையும்
எட்டுச் சீர் அடியானால் 1, 5ஆம் சீரில்
மோனையும் அமைய வேண்டும்.
பொதுவாக, சிறந்த பொருளும் ஒழுங்கான
ஓசையும் பெற்றிருக்க வேண்டும். (விழுமிய பொருளும் ஒழுகிய
ஓசையும் என்பர்)
முதலில் நாற்சீர் வெண்செந்துறை எழுதுவோம்.
எடுத்துக் காட்டு :
நற்றமிழ்
மக்களை நசுக்கிய சிங்களன்
உற்ற
வெற்றி உமிழத் தக்கதே.
இதில், முதலடியில் ந-வுக்கு ந மோனையாக வந்துள்ளது.
இரண்டாமடியில், உ-வுக்கு உ மோனையாக வந்துள்ளது.
முதல் அடியின் இரண்டாம் எழுத்தும், இரண்டாம் அடியின் இரண்டாம்
எழுத்தும் ற்- ஆக எதுகை அமைந்துள்ளது.
நற்றமிழ்
மக்களை
நசுக்கிய
சிங்களன்
உற்ற
வெற்றி
உமிழத்
தக்கதே.
புரிகிறதா? சரி. இன்னொரு
எடுத்துக்காட்டு :
உணவு
விடுதியில்
உழைக்கும்
சிறுவரை
நினைக்கும்
பொழுதே
நெஞ்சம்
நடுங்கும்.
பழந்தமிழ் நூலில் இருந்து ஓர்
எடுத்துக்காட்டு :
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
இப்பொழுது பெரும்பாலும்
புரிந்திருக்கும்.
எழுதிக் காட்டுங்கள். என்ன தோன்றுகிறதோ
அந்தக் கருத்தை வைத்து எழுதுங்கள்.
பிழையாக இருக்குமே எனக் கொஞ்சமும்
தயங்க வேண்டா. திருத்தி அமைத்துக் கொள்ளலாம். வாருங்கள், எழுதுங்கள்.
உதவ அணியமாயிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பார்த்துக் கருத்துரை
எழுதுகிறேன்.
வருக, வருக!
எல்லாரும் கலந்து கொண்டு எழுதுக!
அடுத்த பகுதி
வெண்தாழிசை
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி