மரபுப் பா பயிலரங்கம்
கற்று தரும் ஆசிரியர்-
தமிழநம்பி
.........................................................................................................................................................................................
9. மோனை – 2
மோனை அமையும் எழுத்துக்கள்: அ, ஆ, ஐ, ஒள - ஓரினம் இ, ஈ, எ, ஏ, யா - ஓரினம் உ, ஊ, ஒ, ஓ - ஓரினம் எடுத்துக்காட்டு : உயிர் எழுத்துக்களில் - ஐயும் பொய்யும் ஆண்டவன் அறிவான் எட்டி பழுத்தென்ன, ஈயாதார் இருந்தென்ன? ஓட்டைச் சங்கால் ஊத முடியாது. உயிர்மெய் எழுத்துக்களில் – (அ, ஆ, ஐ, ஒள) க, கா, கை, கெள ச, சா, சை, செள, த, தா, தை, தெள ந, நா, நை, நெள, ஞ, ஞா ப, பா, பை, பெள ம, மா, மை, மெள, வ, வா, வை, வெள (இ, ஈ, எ, ஏ, யா) கி, கீ, கெ, கே சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே நி, நீ, தெ, நே, ஞி, ஞீ, ஞெ, ஞே பி, பீ, பெ, பே மி, மீ, மெ, மே, வி, வீ, வெ, வே (உ, ஊ, ஒ, ஓ) கு, கூ, கொ, கோ செ, சூ, சொ. சோ, து,தூ, தொ, தோ நு, நூ, நொ, நோ பு, பூ, பொ,போ மு, மூ, மொ, மோ மேலே ஒவ்வொரு வரியிலும் உள்ள எழுத்துக்கள் தமக்குள் ஒன்றுக்கொன்று மோனையாக வரும். ஒருவரியில் உள்ள எழுத்துக்கு வேறு வரியில் உள்ள எழுத்து மோனையாக வராது. இந்தப் பட்டியலில், த வரிசைக்கு ச வரிசையும் ந வரிசைக்கு ஞ வரிசையும் ம வரிசைக்கு வ வரிசையும் மோனையாகும் என மேலே குறித்துள்ளதையும் காண்க. இந்தப் பகுதி மலைப்பை ஏற்படுத்துவதாகவும் குழப்பம் தருவதாகவும் உள்ளதெனக் கவலைப்பட வேண்டா! போகப்போகத் தன்னால் தெளிவாகப் புரிந்துவிடும். மோனை அமைப்பது குறித்த ஒரு வெண்பா உள்ளது. அதை நினைவில் கொள்ளுதல் நன்று. அந்த வெண்பா இதுதான்: அகரமோடு ஆகாரம் ஐகாரம் ஒளகான் இகரமோடு ஈகாரம் ஏஎ – உகரமோடு ஊகாரம் ஓஒ, ஞநமவ தச்சகரம் ஆகாத தல்ல அறி. அடுத்து, எதுகை பற்றி அறிந்துகொள்ள இருக்கிறோம்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி
பயிற்சி குறித்து எழும் ஐயங்களை கீழ்
உள்ள மின் அஞ்சலுக்கு எழுதி அனுப்பி வையுங்கள்
tamilparks
@
gmail . com

மரபுப் பா பயிலரங்கம்
|